Feature தேசிய செய்திகள் ,
கருவலகஸ்வெவ விபத்தில் மூவர் உயிரிழப்பு ஐவர் காயம்
Posted by
Puththelil
Published on
Saturday, October 26, 2013
( ஜுட் சமந்த, முஸ்பிக் )
புத்தளம் அநுராதபுர வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 மாத குழந்தையொன்றும் அடங்கியுள்ளது.
மாதம்பை பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற வேன் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதுண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது. வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்ற மூவரும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

( படங்கள் : ஜுட் சமந்த )

0 comments
Readers Comments