Feature பிரதான செய்திகள் ,
ஜனாதிபதி புத்தளம் முஸ்லிம்களை சந்திப்பது தொடர்பான கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Monday, September 9, 2013
எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புத்தளம் நகரிற்கு விஜயம் செய்து புத்தளம் பிரதேச முஸ்லிம்களை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியின் புத்தளம் விஜயம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று இரவு 8.30 மணிக்கு புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் ஜனாதிபதியின் புத்தளம் விஜயம் பற்றி விளக்கமளித்தார். ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்ட தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




0 comments
Readers Comments