<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தேர்தலை மீண்டும் நடாத்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் நிறைவு

( அப்துல் நமாஸ் )


நடைபெற்று முடிந்த  வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்குச் சீட்டுக்கள் ஒரு தொகை புத்தளம் சென். அன்றூஸ் மத்திய கல்லூரியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை மீண்டும் நடாத்தக்  கோரி புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஜனசெத பெரமுன கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஜனநாயக் கட்சி புத்தளம் வேட்பாளர் நீல் சிரிவர்தன ஆகியோரால்  இன்று காலை  உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐ.தே.கட்சி வேட்பாளர்களும்  பகல் வேளையில் தமது ஆதரவை வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது. 

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், ரங்க பண்டார எம்.பி. ஆகியோர் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து  அவர்களுடன் உரையாடியதோடு வாக்குச் சீட்டுக்கள் தொடர்பான விடயங்களையும் அவ் விடத்தில் தெளிவுபடுத்தனர்.

மாலை வேளையில் உண்ணாவிரதபோராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors