Feature பிரதான செய்திகள் ,
சென்.அன்றூஸ் கல்லூரியில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள்
Posted by
Puththelil
Published on
Tuesday, September 24, 2013
( நமாஸ், முஸ்பிக், அஸ்மி )
இம் மாதம் 21ஆம் நடைபெற்று முடிந்த வடமேல் மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்குச் சீட்டுக்கள் ஒரு தொகை புத்தளம் சென். அன்றூஸ் மத்திய கல்லூரியில் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி கிடைக்கப் பெற்றதும் வேட்பாளர்களும் , வாக்காளர்களும் சென்.அன்றூஸ் கல்லூரியைச் சூழ்ந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட பலரும் அவ்விடத்திற்கு விரைந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்குச் சீட்டுக்கள் பரீட்சிக்கப்பட்டன.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட், பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கொழும்பு மாவட்டம் ஏ.ஓ.எம். நபீல் ஆகியோரும் சென். அன்றூஸ் மத்திய கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்தனர்.
பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் கண்டெடுக்கபட்டதாகக் கூறப்படும் வாக்குச் சீட்டுக்கள் சீல் செய்யப்பட்டு புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்திற்கு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளன.

0 comments
Readers Comments