<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மாகாண சபை வேட்பாளர் பைரூஸ் தாக்கப்பட்டுள்ளார்

வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய இனங்களின் ஐக்கியத்தற்கான அமைப்பின் பிரதான வேட்பாளரான கே.எம். பைரூஸ் தாக்கப்பட்டதாக அக் கட்சியின் மற்றொரு வேட்பாளரான ரஸ்மி புத்தெழிலுக்குத் தெரிவித்தார். இன்று மாலை வேளையில் நுரைச்சோலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாகவும் இதன் போது கலாநிதி விக்கிரபாகுவும்  தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாகவும் ரஸ்மி மேலும் தெரிவித்தார். தாக்குதல் தொடர்பாக நுரைச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பைரூஸை வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் ரஸ்மி புத்தெழிலுக்குத் தெரிவித்தார். 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors