<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அரசாங்கத்திற்கு பாடம் படித்துக் கொடுக்கும் தேர்தலாக அமைய வேண்டும்

( ஹமீத் மரைக்கார், அஸ்மி மொஹமட் )
நாங்கள் ஒன்றுபட்டால்தான் இந்த நாட்டில் முஸ்லிம்களாக வாழ முடியும். ஒரு விடயத்திற்காக பொது பல சேனாவிற்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.  முஸ்லிம் உம்மத்தை சேர்த்து தந்ததற்காக.  அது தான் பொது பல சேனா. மஸ்ஜிதுக்குள் அடிப்பட்டுக் கொண்டு பிரிந்து பிரிந்து ஒவ்வொரு ஜமாஅத்களாக இருந்தோரை பொது பல சேனா ஒற்றுமைப்படுத்தியது. அதற்காக நன்றி ஞானசார தேரர் என்று ஒவ்வொரு நாளும் நான் கூறிக்கொள்கிறது என்று ஆசாத் சாலி தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் இனங்களுக்கிடையிலான ஐக்கிய அமைப்பின் (N U O) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புத்தளம் போல்ஸ் வீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆசாத் சாலி மேற்கூரியவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஆசாத் சாலி

இது அரசாங்கத்தை மாற்ற இயலாத ஒரு தேர்தல்.  இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு பாடம் படித்துக் கொடுக்கும் தேர்தலாக அமைய வேண்டும். பொதுவாக முஸ்லிம் பெண்கள் 40வீதமே வாக்களிக்கச் செல்வது.  10 மாவட்டத்தில் 7 மாவட்டங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்கின்றேன். இம்முறை வெளியூரிலுள்ள பெண்களையும் தேர்தலுக்காக வரச்சொல்லியுள்ளோம் என்று நாம் போகும் இடங்களிலெல்லாம் பெண்கள் கூறி வருகின்றனர்.  இம்முறை 80 - 85 வீதமான மக்கள் வாக்களிக்கப் போகின்றார்கள் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ், கருனாதிலக விக்ரமபாகு இனங்களுக்கிடையிலான ஐக்கிய அமைப்பின் (N U O) வேட்பாளர்களான கே.எம். பைரூஸ் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.எம். அபூபக்கர் ஆகியோரும் உரையாற்றினர்.



0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors