Feature நிகழ்வுகள் ,
கல்பிட்டியில் இஸ்லாமிய ஆசிரியர் சங்க கூட்டம்
Posted by
Puththelil
Published on
Wednesday, March 27, 2013
( புத்தளம் செய்தியாளர் )
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க புத்தளம் மாவட்ட கிளையின் புனரமைப்புக் கூட்டம் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் எம். அனஸ் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட கிளை ஏற்பாட்டுக் குழு தலைவர் எஸ்.எஸ்.எம். றிஸாத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் நூஹ் லெப்பை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் எம். அனஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆசிரியர்களின் தொழில்சார் விருத்திக்கு வழி காட்டும் வகையில் ஆசிரியர் தொழிற் சங்கங்களின் சேவையை விஸ்தரிக்குமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு ஏற்ப சங்க கிளைகளை புனரமைத்துச் செயற்பட இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சேவையின் இன்றைய நிலை பற்றிய சிறப்புரையும் 60ஆவது அகவையில் கால் பதிக்கும் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடலும் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

0 comments
Readers Comments