புத்தளம் நட்சத்திரங்கள் ,
சித்தீக்கா முஹ்ஸி தேசிய போட்டியில் இரண்டாமிடம்
Posted by
Puththelil
Published on
Sunday, March 31, 2013
( பாத்திமா )
சர்வதேச தாய் மொழிகள் தினத்தை முன்னிட்டு ( 21.2.2013 ) நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு ஆங்கில மொழி மூல கட்டுரைப் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர்தர மாணவி, பாத்திமா சித்தீக்கா இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் ஸாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியர் எஸ்.ஆர்.எம். முஹ்ஸியின் மகளாகும்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் அரச கரும மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது. பாத்திமா சித்தீக்கா முஹ்ஸிக்கான பரிசினையும் சான்றிதழையும் இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் வழங்கி வைத்தார்.



0 comments
Readers Comments