புத்தளம் காதி நீதிமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
( அபூ ஹன்னான் )
புத்தளம்- சிலாபம் வலயத்திற்கான புதிய காதி நீதிமன்ற நீதிபதியாக நியமனம்பெற்றுள்ள அஷ்ஷெஹ். N.அஸ்மீர் (உஸ்வி) அவர்கள் காதிநீதிமன்ற செயற்பாடுகளை இன்று(26) புத்தளம் காதிநீதிமன்ற கட்டிடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் வைத்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் பெரிய பள்ளி விஷேட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், புத்தளம் பெரிய பள்ளி சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு உறுப்பினர்கள், முன்னாள் காதி நீதிமன்ற நீதிபதி அஷ்-ஷைக் M. C.நெய்னா முஹம்மத் (காசிமி) உட்பட பல தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புத்தளம் காதி நீதிமன்ற கட்டிடம் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதால் அதை நிவர்த்திப்பதற்கு ஊரின் நலன் விரும்பிகள் முன்வருமாறு புதிய காதி நீதிமன்ற நீதிபதி தனது ஆரம்ப உரையில் வேண்டிக் கொண்டார்.
காதி நீதிமன்றத்தை நடத்த நிரந்தரமான ஓரிடம் கூட இல்லாமல், சேவை பெற வருவோரிடமிருந்து ஒரு பென்சிலைக் கூட உதவியாக பெறாமல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் காதி நீதிமன்ற நடவடிக்கைகளை நீண்ட காலம் முன்னெடுத்து சென்றதாக முன்னாள் காதி நீதிமன்ற நீதிபதி எம்.சீ.நெய்னா முஹம்மத் (காசிமி) அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.





0 comments
Readers Comments