உடப்பு பிரதேச கரைவலையில் சிக்கிய அதிகளவான மீன்கள்
Posted by
Puththelil
Published on
Sunday, November 2, 2025
(எம்.ஏ.ஏ.காசிம்)
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடப்பு பிரதேசத்தில் நேற்று பகல் 1.00 மணியளவில் கரை வலையில் அதிகளவிலான மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் கரை வலை பருவ காலம் கடந்த மாதம் ஆரம்பமாகிய நிலையில் சீரற்ற வானிலையினால் கடற்றொழிலை சீராக செய்ய முடியாத நிலையில் இன்று உடப்பு பிரதேசத்தில் கரை வலையில் மீன் பிடியில் ஈடுபட்ட போது சுமார் 20 ஆயிரம் கிலோ கிராம் வெம்பாறை மீன்களும் வெங்கட மீன்கள் 10 ஆயிரம் கிலோ கிராமும் பிடிபட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு வெம்பாறை மீன் சுமார் 5 கிலோ கிராம் முதல் 8 கிலோ கிராம் எடையுடையதுடன் ஒரு கிலோ கிராம் மீன் சில்லறையாக 800 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments
Readers Comments