<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

கற்பிட்டியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட தங்கம்

(ஏ.என்.எம் முஸ்பிக்)


கற்பிட்டி அரிச்சல் களப்பு பகுதியில் கடந்த புதன்கிழமை (01) கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சுமார் 4.454 கி.கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரு சந்தேக நபர்களும் டிங்கி ரக படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (01) காலை கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை சோதனை செய்தனர். டிங்கியின் மீன்பிடி வலையில் பதின்மூன்று (13) சந்தேகத்திற்கிடமான ஈய எடைகள் காணப்பட்டதாகவும், மேற்கொண்ட சோதனையின் போது, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டு ஈய எடைகளாக மறைத்து சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் 4.454 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி வென்தேசிவத்தை மற்றும் ஆனவாசல் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors