<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சிலாபத்தை தாக்கிய டொனாடோ காற்று

 சிலாபம்  இரணவில மற்றும்  கடலோர பிரதேசங்களில் திடீரென வீசிய காற்றின் காரணமாக அப் பிரதேசங்களில் வீடுகளுக்கும்  கட்டடங்களுக்கும்  சேதங்கள்  ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு அறிவித்துள்ளது.   இன்று
அதிகாலை 1.15  மணியளவில் சுமார்  மூன்று நிமிடங்கள்  காற்று வீசியதாக  அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

சிலாபம்  இரணவில   கடலோர பிரதேத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த  நிரந்தர மீன் வாடியொன்றும் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் வாடிகள் இரண்டும் முழுமையாக சேதமடைந்துள்ளன..   இரணவில பிரதேசத்தில் உல்லாச விடுதி ,    சனசமூக நிலையம் ,  முன்பள்ளியொன்று  , வியாபார நிலையமொன்று , 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.  ஒரு மீன் வாடியில் காணப்பட்ட மீன்பிடி படகொன்றுக்கு  சேதம் ஏற்பட்டுள்ளது.  அதேவேளை சிலாபம் கடலோர பிரதேச கிராம சேவகர் பிரிவில் ஆறு  வீடுகளும் ஒரு வியாபார நிலையமும் காற்றினால் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ தெரிவித்துள்ளது.

இவ்வாறு சேதங்களை ஏற்படுத்திய காற்று டொனேடோ காற்றாக இருக்கலாம்  என்று   புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அலகு தெரிவித்துள்ளது
 
 

   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors