<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் மாவட்டத்தில் வறட்சியினால் 45,773 பேர் பாதிப்பு

தற்போது நிலவும்   கடும் வறட்சி காரணமாக  புத்தளம் மாவட்டத்திலுள்ள ஒன்பது  பிரதேச செயலாகப் பிரிவில் 13,427 குடும்பங்கலிலுள்ள 45,773 பேர்  பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அலகு அறிவித்துள்ளது.

வறட்சி காரணமாக அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பது  மகாகும்புக்கடவல   பிரதேச செயலகப் பிரிவாகும்.  3.042  குடும்பங்களைச் சேர்ந்த 9,562 பேர் இந்த பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகப் பிரிவில்  1,598 குடும்பங்களைச் சேர்ந்த 5,719 பேறும்  முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் 2.041 குடும்பங்களைச் சேர்ந்த 7,404 பேறும் வறட்சியினால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.   

அதேவேளை பள்ளம பிரதேச செயலகப் பிரிவில் 1,823 குடும்பங்களைச் சேர்ந்த 6,173 பேறும் நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவில்   1,019 குடும்பங்களைச் சேர்ந்த 3,365 பேறும்  நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 392 பேறும்  தற்போது நிலவவும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் 455 குடும்பகளைச் சேர்ந்த 1,572 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் 1,137  குடும்பங்களைச் சேர்ந்த 3,348 பேறும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அலகு தெரிவித்துள்ளது.

இவ்வாறு   வறட்சி  காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  தேவையான குடிநீரினை பவுஸர் மூலம் வழங்கி வருவதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு தெரிவித்துள்ளது

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors