Photo Gallery ,
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த அலி சப்ரி
Posted by
Puththelil
Published on
Tuesday, May 21, 2019
( அப்துல் நமாஸ் )
அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் நகர சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம். அலி சப்ரியும் குழுவினரும் அப் பகுதிகளுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற் கொண்டனர்.
புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம், நாத்தாண்டிய, மானிங்கல, தும்மோதர, கொட்டாரமுள்ள ஆகிய பிரதேசங்களில் அசம்பாவிதம் காரணமாக பாதிக்கட்ட மஸ்ஜிதுகள், வீடுகள், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களை இவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மஸ்ஜிதுகள், வீடுகள், வியாபார நிலையங்கள் சிலவற்றுக்கு அலி சப்ரி நிதி உதவிகளை வழங்கியதுடன் பாரிய அளவில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடுகளை தருமாறும் உரிய தரப்பினரிடம் அலி சப்ரி வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் அலி சப்ரியின் தலைமையில் இப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட குழுவில் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ், புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலம் உட்பட பலரும் அடங்கி இருந்தனர்.
நாத்தாண்டிய
மானிங்கல
தும்மோதர
சிலாபம்
உதவிகள் வழங்கி வைப்பு
கொட்டறாமுல்லையில் வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்களில், முழுமையாக எரிக்கப்பட்ட சில வீடுகளுக்கு நிதி உதிவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மைக்குளம் மஸ்ஜிதுக்கு அருகில் அமைந்துள்ள சேதமாக்கப்பட்ட உணவகத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
சிலாபம் மஸ்ஜிதிற்கு அருகில் சுய தொழில் ( வடை ) செய்து கொண்டிருந்தவர்களின் கரத்தைகள் சேதமாக்கப்பட்டன. இவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.1 comments
Readers Comments

May 22, 2019 at 9:08 AM
Masha Allah
Barakallahu feekum