<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

இன்று முதல் புத்தளத்தில் கறுப்பு நாட்கள்

புத்தளத்திற் கொண்டு வரப்படவுள்ள குப்பை  திட்டம் இந்நாட்டின்  அபிவிருத்திக்காக அல்ல என்பதை புரிந்து போராட இளம் இரத்தங்கள் அணிதிரலட்டும்.  தமது பிள்ளைகளை நோய்க்கு காவு கொடுக்க எந்தத்தாயும் துணிய மாட்டாள் .போராட்டத்தில் பின்நிற்க அவள் கோழை  அல்ல. தனது உரிமைக்காக போராட மாணவர்களுக்கும் உரிமை உண்டு எதிர்காலம் அவர்களுடையது. எமது கரங்களை ஒன்று சேர்ப்போம் பலப்படுத்துவோம் என்ற கோஷங்களுடன் குப்பைக்கு எதிரான  போராட்டம் வலுப்பெற்றுள்ளது.


இன்று (  13 )  நாளை (  14 )  நாளை மறுதினம் (  15 )  ஆகிய மூன்று நாட்கள்   புத்தளத்தின் கறுப்பு நாட்களாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட  சர்வ மத குழு, 
 பௌத்த மத்திய நிலையம் ,  கிறிஸ்தவ சபை ,  இந்து மகா சபை ,  ஜம்இய்யதுல் உலமா  புத்தளம் கிளை ,  புத்தளம் பெரிய பள்ளி மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பு ஆகியன இணைந்து மூன்று நாட்களை கறுப்பு நாட்களாக   பிரகடனப்படுத்தியிருக்கிறது.


இன்றைய தினம்  : 

சகலவீடுகளிலும் , வாகனங்களும், கறுப்புக் கொடியேற்றி தமது  எதிர்ப்பை வெளிப்படுத்துவதையும். சகல அரச,  தனியார் அலுவலகர்களும்   கறுப்பு பட்டி அணிந்து வேலைக்குச் செல்வதையும் உறுதிப்படுத்தும் நாள்.


நாளை  ( பெப்ரவரி - 14) 

ஊரிலுள்ள அனைவரும்  ஊரின் ஒவ்வொரு ஆத்மாவும் நோன்பு நோற்று, ஏக வல்ல இறைவனிடம் தன் கண்ணீர்துளிகளால் கையேந்தும் நாள்,   இப்த்தார் நிகழ்வு புத்தளம்   கொழும்பு முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 வெள்ளிக்கிழமை  ( பெப்ரவரி - 15 )

புத்தளம் நகரில்  பூர்ண
 ஹர்த்தால் அனுஷ்டித்து,  மதியம் 1 மணிக்கு  எழுச்சிப் பேரணியும்   பொதுக் கூட்டமும்


புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டு வரவேண்டாம் என்று சகல இன  மக்களும் ஒன்று சேர்ந்து போராடும் இந்த போராட்டத்தின் குரல்களாவது உரியவர்களின் காதுகளில் விழுமா ???????   அதன்  மூலம் புத்தளம் மக்கள் பாதுகாக்கப்படுவார்களா  ??????????????


அல்லது புத்தளம் மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காது  நுரைச்சோலை அனல் மின் நிலையம் நிறுவப்பட்டது போன்று புத்தளத்தில் குப்பைகள்  கொட்டப்படுமா என்ற அச்சத்துடன் வயது வித்தியாசமின்றி புத்தளத்தின் வாழும்   சகல இன மக்களும்   இருந்து   வருகின்றனர்.   
 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors