<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

88 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் ஆனமடுவில் தொழில்நுட்பக் கல்லூரி

( அப்துல் நமாஸ் )
ஆனமடு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும்  தொழில் நுட்ப கல்லூரிக்காக 388 மில்லியன்   ரூபாய்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்ப கல்லூரியில் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்கை நெறிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக   நீர்பாசன, நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

தொழில் நுட்பக்  கல்லூரியின் நிர்மாணப் பணிகளை மேற் பார்வை செய்த பின்னர் கருத்து தெரிவித்த  போதே இராஜாங்க அமைச்சர்  ரங்கே பண்டார இவ்வாறு  தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

 700 மாணவர்கள் ஒரே நேரத்தில் கற்பதற்கான வகுப்பறைகள், விளையாட்டரங்கு, நீச்சல்  தடாகம் .நூலகம், விஞ்ஞான கூடம், மாணவர்களுக்கான விடுதி உட்பட பல்வேறு வசதிகளுடன் இந்த தொழில் நுட்பக் கல்லூரிக்கான நிர்மாணப்பணிகள் இடம் பெற்று வருகின்றன. நிர்மாணப்பணிகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறும்     


புதிய உலகிற்கு ஏற்ப கற்கை நெறிகளை கற்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். புத்தக அறிவுடன் தமது கல்வியை மட்டுப்படுத்திக்கொள்ளாது நடைமுறை திறன்களை இந்த கற்கை நெறிகளினூடாக  அபிவிருத்தி செய்ய நடவடிக்கை  மேற் கொள்ளப்பட்டுள்ளதாக   இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors