<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பிள்ளையை பாடசாலைக்கு சேர்க்குமாறு தந்தை உண்ணாவிரதம்

( கல்பிட்டி செய்தியாளர் )

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இந்த வருடம்  தனது மகளுக்கு தரம் ஒன்றுக்கு அனுமதி  கிடைக்கவில்லை என்று கோரி தந்தை ஒருவர் தனது பிள்ளையுடன்  உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலையில் ஈடுபட்டார். இது தொடர்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கல்பிட்டி மண்டல்குடா பிரதேசத்தில் வசிக்கும்  ரிசானை தொடர்பு கொண்டு கேட்ட போது

எனது இரு பிள்ளைகள்  கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்றனர். தற்போது மூன்று பிள்ளைகள் இங்கு கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். ஐந்து பிள்ளைகளுக்கு அனுமதி கிடைத்த போது எனது ஆறாவது பிள்ளைக்கு அனுமதி கிடைக்காததால் இந்த போராட்டத்தை ஆரம்பித்தேன் என்று கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ரிசான் நண்பகல் வேளையில் தனது  போராட்டத்தை கைவிட்டார். இது தொடர்பாக வினவிய போது கல்பிட்டி பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள் இருவர் பிள்ளையின் அனுமதி தொடர்பாக நிர்வாகத்துடன் பேசுவதாகவும் நாளை நண்பகல் வரை அவகாசம் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து எனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டேன் என்று விளக்கமளித்தார்.

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஆரம்ப பிரிவு மூடப்பட்ட பின்பு இந்த வருடம் தரம் ஒன்றிற்கு இரண்டு வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors