Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் மாவட்டத்தில் மார்ச் 12 இயக்கம்
Posted by
Puththelil
Published on
Thursday, February 9, 2017
( நமாஸ் , முஸ்பிக் )
2015 மார்ச் 12 ஆம் திகதி, மார்ச் 12 இயக்கம் சமூகமயப்படுத்திய இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தின் நேர்மையான மாற்றத்திற்காக தேர்தல்களின் போது போட்டியிடும் அபேட்சகர்களுக்கான அளவுகோல்களை அடையாளம் காட்டியது. மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சமூகத்தில் கலந்துரையாடல்கள் ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை அது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கு அழுத்தத்தை கொடுக்க முடிந்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக எதிர்காலத்தில் இடம் பெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை இலக்காகக் கொண்டு வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது குறிப்பிட்ட அளவுகோல்களை பின்பற்றும்படி அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கும், தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது கட்சி, நிற பேதமின்றி சிறந்த பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களர்களை அறிவூட்டும் நோக்கில் வேலைத்திட்டமொன்று தேசிய ரீதியில் நடாத்த மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல் புத்தளம் சேனாதிலக ரெஸ்டில் இடம் பெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் புத்தியாகம தேரர், பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி, மார்ச் 12 இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.சீ.எம். ருமைஸ், வொடப்ட் நிறுவனத்தின் வேலை திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி புத்தளம் நகரில் இடம் பெறவுள்ளன.

0 comments
Readers Comments