<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வியாபாரம் செய்ய நாளை முதல் தடை

( முஸ்பிக்,  நமாஸ் )
புத்தளம் நகரில் நடைபாதையில் தமது வியாபாரங்களை அனுமதி இன்றி நடாத்திக் கொண்டிருக்கும் வியாபாரங்களுக்கு நாளை முதல் தடை விதித்துள்ளதாக புத்தளம் நகர சபை நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம். சபீக் தெரிவித்துள்ளார்.

புத்தளம் தள வைத்தியசாலை தொடக்கம் பஸ் நிலையம் வரையும், அதே போன்று பஸ் நிலையம் தொடக்கம் மக்கள் வங்கி வரையிலுமுள்ள நடைபாதைகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தமது வியாபார பொருட்களை அகற்றுமாறு நேற்றைய தினம் அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக வினவிய போதே  நிர்வாக உத்தியோகத்தர்  சபீக் மேற் கூறியவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சபீக்

புத்தளம் நகரை பாதுகாப்பான அழகான நகரமாக வைத்திருக்க வேண்டியது நமது அனைவரின் பொறுப்பாகும். பாதசாரிகளுக்கு  இடையூறாக அனுமதி எதுவும் இல்லாது நடைபாதைகளில் வியபாரம் செய்வோரை அவ்விடத்தில் இருந்து அகன்று கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளோம்.  புத்தளம் பொலிஸ், நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இந்த பணியை செய்யவுள்ளோம். நாளை முதல் குறித்த பிரதேசத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டது.

அதே போன்று புத்தளம் பஸ் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors