Feature பிரதான செய்திகள் ,
நவவி மூலம் பாத்திமாவிற்கு எட்டு இலட்சம் ரூபா அபிவிருத்தி
Posted by
Puththelil
Published on
Monday, January 30, 2017
( உம்மு ஹயாம் )
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகள் இன்று பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு கெமரா தொகுதி, வீதி விளக்குகள், புரொஜெக்டர், திறந்த வகுப்பறை ஆகியன பாத்திமா கல்லூரிக்கு நவவியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பெற்றன.
பாத்திமா அதிபர் திருமதி எம்.எஸ். ரஜியாவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சி இளைஞர் அமைப்பின் முகாமையாளர் எம்.என்.எம். நுஸ்கி, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments