<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஹைப்பர்ஸ் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி

( எம்.ஏ.எம். அப்பான் ) 

புத்தளம்  ஹைப்பர்ஸ் மாணவர் கழகத்தினால் நடாத்தப்பட்ட    ஹைப்பர்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் 14 ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் ஸாஹிரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

20 வயதிற்குட்பட்டோருக்காக நடாத்தப்பட்ட  இந்த  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப போட்டிகள்   7 ஆம் திகதி முதல்  நடைபெற்றன. சேலேஜிங் போயிஸ், ஸ்பார்ட்னஸ், மேன் கராட்டே மற்றும் ஜுவநெல் ஆகிய கழகங்கள் அரை இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளன.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்  செம்பியன் அணிக்கு செம்பியன் கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபா பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 15 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்படவுள்ளன.

இந்த இறுதிப் போட்டியின் போது இலவச  WiFi வழங்கப்படவுள்ளதுளதுடன்   zoom karting இன் கோ கார்ட் சாகசமும் இம் மைதானத்தில் நடைப்பெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

1 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors