Feature பிரதான செய்திகள் ,
ஆயுர்வேத வைத்தியசாலைக்கு இஸ்லாமிய மாணவர் இயக்கம் உதவி
Posted by
Puththelil
Published on
Thursday, February 4, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கமும் சுரகிமு ஸ்ரீலங்கா அமைப்பும் இணைந்து புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி வைத்திய உபகரணங்களை இன்று காலை அன்பளிப்புச் செய்தனர். இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை இந்த அமைப்புக்களினால் ஆயுர்வேத வைத்தியசாலையில் மூலிகை மரம் நடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.ஏ.என். மதுவந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் சித்ரானந்த, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மாலிக், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம்.ஏ. ஜனாப், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நவவி வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

0 comments
Readers Comments