Feature புத்தளம் நட்சத்திரங்கள் ,
முகம்மது முன்ஸிப் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்
Posted by
Puththelil
Published on
Sunday, January 3, 2016
( நமாஸ், முஸ்பிக் )
நேற்று வெளியிடப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவன் ஜே.எம். முகம்மது முன்ஸிப் உயிரியல் விஞ்ஞான பிரிவில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார். மூன்று ஏ. பெறுபேற்றைப் பெற்றுள்ள இவரின் இஸட் புள்ளி 2.8672 ஆகும்.
இவரின் தந்தை ஏ.ஓ. ஜெளபர் முஸாதிக் புத்தளம் மணல் தீவு தமிழ் வித்தியாலயத்திலும் தாய் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் ஆசிரியர்களாக கடமை புரிகின்றனர். முகம்மது முன்ஸிப் 2006 இல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் அகில இலங்கையில் நான்காம் இடத்தையும் பெற்றதோடு 2012 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஒன்பது ஏ. பெறுபேற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வியில் மாத்திரமின்றி இணைப் பாட விதான விடயங்களிலும் அதிகமான பரிசில்களையும் முகம்மது முன்ஸிப் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கான உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் அகில இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான பரிசினை முகம்மது முன்ஸிப் கடந்த வாரம் பெற்றுக் கொண்டார்.

0 comments
Readers Comments