<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பொதுக் கூட்ட மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

( எம்.ஓ.எம். ரிபாய் )
புத்தளம் சமுர்த்தி உதவி பெறுவோரின் 36 சங்கங்களுக்கான பொதுக் கூட்ட மண்டபம் புத்தளம் நெடுங்குளம் வீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி வளாகத்தில்  நேற்று திறந்து வைக்கப்பட்டது.  புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொதுக் கூட்ட மண்டபத்தை  திறந்து வைத்தார்.

புத்தளம் மாவட்ட சமுர்த்தி அத்தியட்சகர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், வங்கி முகாமையாளர், சமுர்த்தி அதிகாரிகள் உட்பட சமுர்த்தி சங்கங்களின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 
 
 
  
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors