Feature தேசிய செய்திகள் ,
ஸாஹிரா கல்லூரிகளின் வலைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Saturday, December 19, 2015
( அப்துல் நமாஸ் )
நமது நாட்டில் காணப்படும் ஸாஹிரா கல்லூரிகளின் வலையமைப்பொன்றினை ஆரம்பிப்பது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மாலை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இடம் பெற்றது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வுகள் இரவு 10.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவு பெற்றது.
கொழும்பு ஸாஹிரா கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கல்முனை, மாவனெல்ல, அளுத்கம, மாத்தளை, கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரிகள் கலந்து கொண்டன. ஸாஹிரா கல்லூரிகளின் முகாமைத்துவ உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் தலா மூன்று பேர் வீதம் ஒரு பாடசாலையிலிருந்து ஒன்பது பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரைக்கார் வரவேற்பு உரையை ஆற்றியதுடன் கொழும்பு ஸாஹிரா கல்லூரி பணிப்பாளர் சபை தலைவர் பெளஸுல் ஹமீத் கூட்டத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட சகல ஸாஹிரா கல்லூரிகளும் தமது பாடசாலையின் கட்டமைப்பு, அடைவுகள் மற்றும் இலக்குகள் தொடர்பாக புள்ளி விபரங்களுடன் தமது விளக்கங்களை சபைக்கு சமர்ப்பித்தனர்.
மாணவர்களை சமூக மயமாக்கல் மற்றும் சிறந்த தலைவர்களாக உருவாக்கல் என்ற கருப்பொருளில் இயங்கும் வாழ்க்கை தேர்ச்சி கழகம் Life Competency Club தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஸாஹிரா கல்லூரிகள் ஒற்றுமையுடன் செற்படுவோம் என்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமித்து தமது சம்மதத்தை தெரிவித்துக் கொண்டனர்.
இறுதியாக ஸாஹிரா கல்லூரிகளின் வலையமைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சகல ஸாஹிரா கல்லூரிகளுக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பாக ஞாபகார்த்த நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை மேலும் மெருகூட்டும் படியாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர் தலைவர்களின் செயற்பாடுகளும் அமைத்திருந்தன.

0 comments
Readers Comments