<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் தமிழ் பேரவையின் செய்தியாளர் சந்திப்பு

( அப்துல் நமாஸ் )
புத்தளம் தமிழ்  பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை புத்தளம் ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் இடம் பெற்றது.   புத்தளம் தமிழ் பேரவையின் தலைவர் வீ. சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் பேரவையின் போஷகர் வீ. சுந்தரராம குருக்கள் உட்பட அதன் உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த  புத்தளம் தமிழ் பேரவையின் தலைவர்

புத்தளத்தில் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களின் தேவைகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக புத்தளம் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை ஒன்றிணைத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக இயங்குவதற்கான நோக்கத்துடன் இந்த  புத்தளம் தமிழ் பேரவை உருவாக்கப்பட்டது.

ஆலயங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளை  தீர்த்து வைத்தல் சம்பந்தமாக  தமிழ் பேரவை முதற் கடமையாக சேகுவன்தீவு கிராமத்திலுள்ள முருகன் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக ரீதியான பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளோம். பேரவையின் உதவியோடு கும்பாபிஷேகங்களை செய்வதற்கான ஏற்பாடுகள் பேரவையின் உதவியுடன் இடம் பெற்று வருகின்றன. எமது பேரவையின் ஆலோசகர் புத்தளம் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சுந்தரராம குருக்கலின் தலைமயி இந்த  கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்ட ஏனைய விடயங்கள் இம் மாத புத்தெழில் செய்திப் பத்திரிகையில் 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors