<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தேர்தல் தொடர்பாக புத்தளம் பெரிய பள்ளியின் அறிக்கை

( அப்துல் நமாஸ் )
நாளை நடைபெறவுள்ள  பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புத்தளம் பெரிய பள்ளியினால் 12.08.2015 திகதியிடப்பட்ட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2015

அன்பின் புத்தளம் மாவட்ட  வாக்காளர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்

2015 பாராளுமன்ற  பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓரு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எமது புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்கள் நிதானத்துடனும் சமயோசிதமாகவும் தமது வாக்குரிமையை பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக புத்தளம் மாவட்ட மக்கள் ஒற்றுமைபட்டு வாக்களித்து இந்த நாட்டின் நல்லாட்சிக்கான பயணத்தில் ஒரு பங்காளியாக இருந்ததைப் போன்று இம் முறையும் எமது மக்கள் இத் தேர்தலில் ஒற்றுமைபட்டு வாக்களிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.


கடந்த ஜனாதிபதித் தேர்தலைவிடவும் இம் முறை புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் கடந்த காலங்களைப் போன்று எமது முஸ்லிம் வாக்காளர்கள் அசமந்தப் போக்கில்லாமல் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டிய தேவையும்  உள்ளது.  குறிப்பாக பெண்களை கூடுதலாக  இம் முறை வாக்களிப்பில் ஈடுபடுத்த அனைத்து சமூக அமைப்புகளும் ஆர்வத்துடன் முன் வருமாறு புத்தளம் பெரிய பள்ளிவாயல் வேண்டிக் கொள்வதோடு,  தமது விருப்புவாக்குகளை சிதறடிக்காத வண்ணம் மக்களை தெளிவுபடுத்துமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

மேலும்  வாக்களிப்பில் ஈடுபடும் வாக்காளர்கள் அரசியல், கட்சிகளின் ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் சமூக ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படாதவகையிலும்,பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுகின்றஅதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடந்து கொள்ளுமாறும் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.

அத்தோடு,பொருத்தமான சமூகத்தின் பாராளுமன்ற தலைமைத்துவமொன்றை தெரிவுசெய்வதற்காக தேர்தல் தினம் நேரங்காலத்துடன்  தமது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தமது வாக்குகளை அளிக்குமாறும்,  தொடர்ந்து வரும் நாட்களில் வீதிகளிலும் பொது இடங்களிலும் அமைதியைப் பேணுவதோடு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பாக்கியமிக்க புத்தளம் நகரின் ஒற்றுமையையும், அமைதியையும் பேணி நடந்துகொள்ளுமாறும்  தயவாய் வேண்டிக்  கொள்கின்றோம்.

 நிர்வாகம்
பெரிய பள்ளி
புத்தளம்







0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors