பிரதான செய்திகள் ,
புளிச்சாக்குளம் விபத்தில் மூவர் உயிரிழப்பு
Posted by
Puththelil
Published on
Monday, April 6, 2015
( புதுகுடியிருப்பு செய்தியாளர் )
இன்று காலை புளிச்சாக்குளம் புதுகுடியிருப்பு பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
விமான நிலையம் சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் புத்தளத்லிருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறியும் மொதுண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த எஸ்.எம். நிஹ்மதுல்லாஹ் ( மகன் வயது 33 ), எப். பர்வின் ( பேத்தி 9 மாதம் ) எ. விஸ்மத் உம்மா ( தாய் வயது 55 ) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர். ஹலீமா ( மகள் வயது 28 ) பஸ்லா ( பேத்தி - இரட்டைப் பிள்ளைகள் வயது 9 மாதம் ) ஆகிய இருவரும் காயத்திற்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் இஸ்மாயில் புரம் வேப்பமடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
முந்தல் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஐ.எல்.எம். சியாத் முன்னிலையில் மரண பரிசோதனை புத்தளம் தள வைத்தியசாலையில் இன்று மாலை இடம் பெற்றது.

0 comments
Readers Comments