<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மாவட்ட செயலாளரை வரவேற்கும் நிகழ்வு

( நமாஸ், முஸ்பிக் )
புத்தளம் மாவட்ட செயலாளராக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள என்.எச்.எம். சித்ரானந்த  புத்தளம் மக்கள் சார்பாக புத்தளம் பெரிய பள்ளியினால் வரவேற்று கெளரவிக்கபட்டார். புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம்.ஏ. ஜனாப் தலைமயில் இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயக்க, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம். நவவி, கிராம அதிகாரிகள், பெரிய பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

சட்டத்தரணி ஏ.என்.எம். பிஸ்ருல் அமீன், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர். பெரிய பள்ளி நிர்வாக சபை செயலாளர் ஜே.இஸட்.எம். நாஸிக் நன்றி தெரிவித்து உரையாற்றினார். புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தவிற்கு பொது மக்கள் சார்பாக பெரிய பள்ளி தலைவர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். நிகழ்வு நிறைவு பெறும் போது மஃரிபிற்கு அதான் கூறியதால்  மஃரிப் தொழுகையை மாவட்ட செயலாளரும்., மேலதிக செயலாளரும் அவதானித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors