<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஏன் ? எதற்காக ? இவ்வகை பெயர் பலகைகள் ?

 ( அப்துல் நமாஸ் )
புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கு செல்லும் 150 கிலோ மீட்டர்  பாதை காபட் இடப்பட்டு பொது போக்குவரத்திற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து  வில்பத்து தேசிய பூங்கா  ஊடாகவே இடம் பெறுகின்றது. எழுவன்குளம் முதல் ( வில்பத்து தேசிய பூங்கா  ஊடாக ) சிலாபத்துறை  வரையிலான  40 கிலோ மீட்டர் பாதை காபட் இடப்படாது  பொரால் பாதையாகவே இன்னும் காணப்படுகின்றது. அந்த பிரதேசம் வில்பத்து தேசிய பூங்கா  அமைந்து இருப்பதால் மிருகங்களுக்கு பறவைகளுக்கு பொது போக்குவரத்தினால் இடையூறு ஏற்படும் என்று அந்த பாதை பொரல் பாதையாகவே காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கு செல்லும் பாதைக்கு நேர கட்டுபாடோன்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால்  விதிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு பின்பு இந்த வீதியினூடாக பயணிக்க முடியாது.

அந்த வகையில் புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னார் செல்லும் பாதை  திறப்பதற்கு முன்பு புத்தளத்திலிருந்து மன்னார் செல்வதாயின் அனுராதபுரம் ஊடாக அல்லது ஓயாமடு ஊடாக பயணிக்க வேண்டும். அவ்வழியே பயணிப்பதாயின்  முறையே  80, 30 கிலோ மீட்டர்கள் கூடுதலாக பயணிக்க வேண்டும். அந்த வகையில் புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கு செல்லும் பாதையே இன்று கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது.

பொதுவாக ஊரின் பெயரை அல்லது எல்லையை காட்டுவதற்கு ஊரின் பெயருடன் பெயர் பலகை காட்சிப்படுத்தப்படும். வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பெயர் பலகை ஊர் ஆரம்பிக்கும் இடத்தில் வீதி ஓரத்தில் நடப்பட்டிருக்கும். பயணிகளின் வசதி கருதியே இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.  அதன் மூலம் ஊரை இலகுவாக அறிந்து கொள்ள  முடியும். அதேவேளை ஏனைய ஊர்களுக்கான தூரத்தை காட்டும் அறிவித்தலும் பயணிகளின் நலன் கருதி நடப்பட்டிருக்கும்.

புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கு செல்லும் பாதையின் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின் அண்மையில் புதிய அமைப்பிலான பெயர் பலகைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அதாவது வழமை போன்று ஊர் ஆரம்பமாகும் இடத்தில் ஊரின் பெயர் பலகை இடப் பக்கம் பொறுத்தப்பட்டுள்ள அதேவேளை வலப் பக்கம்அதே வகையான பெயர் பலகை நடப்பட்டு  சிவப்பு நிற மையினால் வெட்டப்பட்டுள்ளது. ஊரின் எல்லை முடியும் பகுதியிலும்  அதே வகையான பெயர் பலகை  வலப் பக்கம் நடப்பட்டு  சிவப்பு நிற மையினால் வெட்டப்பட்டுள்ளது. வாகன சாரதிகளையும் பயணிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு விடயமாக இந்த வகை பெயர் பலகைகள்  மாறி விட்டன.

புத்தளத்தில் ஆரம்பமாகும் இவ்வகையான பெயர் பலகை வண்ணாத்தவில்லு,எழுவன்குளம், மரிச்சிக்கட்டி, சிலாபத்துறை, முத்தரிப்புத்துறை,நானாட்டான், வங்காலை ஆகிய பிரதேசங்களில் மொத்தம்  16 பெயர் பலகைகள்  பொறுத்தப்பட்டுள்ளன.  இது தொடர்பாக புத்தளம் வீதி அதிகார சபை உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு பொறுப்பான பிரதேசத்தில் பொறுத்தப்பட்டுள்ள பெயர் பலகை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென்றும் வீதியை காப்ட் செய்த நிறுவனமே பெயர் பலகையை பொறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறு பொறுத்தப்பட்டுள்ள பெயர் பலகை பிழையாக பொறுத்தப்பட்டுள்ளதா அல்லது ஊரின் எல்லை முடிவடைவதை குறிப்பதற்காக பொறுத்தப்பட்டுள்ளதா என்று தெரியாதுள்ளது. 

பொதுவாக ஊரின் எல்லை முடியும் இடத்தில் பயணிகளுக்கு நன்றி தெரிவித்து அந்த பிரதேச உள்ளூராட்சி சபையினால் அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தினால்  ஓர் அறிவிப்பு பலகை நாட்டப்பட்டிருக்கும். ஆனால் இவ்வாறு ஊரின் எல்லை முடிவடிந்து விட்டது என்று குறிக்கும் பெயர் பலகைகள் இதுவரை பொறுத்தப்படவில்லை.  
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors