கட்டுரை ,
இம் முறையும் எம்.பீ. எட்டாக்கனியா ?
Posted by
Puththelil
Published on
Tuesday, February 24, 2015
புத்தெழில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் தலைப்பு 16 - 28 02.2015
இவ் வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புத்தளம் மக்களின் எதிர்பார்ப்பு எமக்கென ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதாகும். அந்த எதிர்பார்ப்பு இம் முறையும் எட்டாக் கனிதான் என்று சிந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு பல்வகை நியாயமான காரணங்களை முன்வைக்கலாம்.
தற்போதுள்ள புதிய நல்லாட்சி என்ற சூழ்நிலையில் அடுத்த பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி யார் என்பது தொடர்பாக பல்வகை கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரு பிரதான கட்சிகள் பொதுத் தேர்தல் களத்தில் தமது பலத்தை பரீட்சிக்கும். இரு கட்சிகளும் தாமே அடுத்த பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி என்று போட்டி போட்டுக் கொண்டு கூறி வருகின்றனர்.
அதே வேளை தற்போதுள்ள எம்.பீ. மார்களில் பலர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் பராளுமன்றத்தை அவசரமாக கலைப்பதை விரும்புகிறார்கள் இல்லையாம். காரணம் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் பலருக்கு உள்ளதாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமது கட்சி தலைமையிடம் அவசரமாக பொதுத் தேர்தலை நடாத்த வேண்டாமென்றும் கூறியுள்ளனராம்.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையில் 114 எம்.பீ. மார் கையொப்பமிட்டுள்ளனராம். நம்பிக்கை இல்லா பிரேரணை வெற்றி பெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து விடுவேன் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லா பிரேரணை அமைதியடைந்து விட்டது போல் தோன்றுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில்தான் புத்தளம் மாவட்டம் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளது. பெரும்பாலும் இரு பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடும். இவ்விரு கட்சிகளிலேயே எமது சிறுபான்மை வேட்பாளர்களும் பெரும்பாலும் போட்டியிடுவர். முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். எனினும் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று அதன் உறுப்பினர்கள் கூறிவ ருகின்றனர். எது எப்படியோ இருமுனை அல்லது மும்முனை போட்டி என்பது நிச்சயம்.
கே.ஏ. பாயிஸ், எம்.என்.எம். நஸ்மி, ஏ.ஓ. அலிகான், ஏ.ஆர். எம். அலிசப்ரி ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலில் (இரு பிரதான கட்சிகளில்) போட்டியிடுவர் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். அதே வேளை எம்.எச். எம். நவவியும் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் சியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை எஸ்.எச்.எம். நியாஸ் தேர்தலில் குதிக்கலாம். எஸ்.ஏ. எஹியாவும் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் அந்த பட்டியலில் அனைவருமே முஸ்லிம் வேட்பாளராக இருக்கும் வாய்ப்பே உள்ளது. டாக்டர் இல்லியாசும் தேர்தலில் போட்டி யிடலாம்.
புதிய புள்ளி விபரத்தின் அடிப்படையில் புத்தளம் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் சிறுபான்மை நிலையிலேயே உள்ளனர். வழமை போன்று முஸ்லிம் வாக்குகள் பிரிந்து செல்லும் நிலை உருவாகும். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தது எவ்வாறு உண்மையோ அதே அதிகரிப்பு பொதுத் தேர்தலில் காணப்பட்டாலும் மைத்திரிபால சிரிசேனவுக்கு அளிக்கப்பட்டது போன்று ஒரு வேட்பாளருக்கு அனைத்து வாக்குகளும் கிடைக்கும் என்பது வெறும் கனவுதான். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்வுக்கு புத்தளம் தொகுதியில் கிடைத்த வாக்குகள் 24,235. அந்தளவு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால் கூட முஸ்லிம் எம்.பீ.யை பெற்றுக் கொள்ள முடியாது. இறுதி பாராளுமன்றத் தேர்தலில் பாயிஸ் 26,489 வாக்குகளையும் எஹியா 17,571 வாக்குகளையும், இஸ்மாயில் ஹாஜியார் 12,021 வாக்குகளைப் பெற்றும் கூட எம்.பீ.யாகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில் இறுதி பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியில் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்ட எம்.பீ. மில்ரோய் பெற்ற வாக்குகள் 31,809
புத்தளம் தொகுதிக்கு முஸ்லிம் எம்.பீ. ஒரு வரை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் பெரும் போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டி வரும். புத்தளம் தொகுதியில் பெரும்பான்மை வேட்பாளர்களின் கைகள் இப்பொழுதே ஓங்கியுள்ளன. சிறுபான்மை வாக்காளர்கள் தமது வாக்குகளை பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு அள்ளி வழங்க பெரும்பான்மை வாக்காளர்கள் சிறுபான்மை வேட்டபாளர் ஒருவரை எம்.பீ. யாக்குவதற்கு போதுமான வாக்குகளை தருவார்கள் என்பது சந்தேகமே.
புதிய அரசினால் முன்வைக்கப்பட்ட இடைக் கால வரவு செலவு திட்டத்தில் பொது மக்களுக்கு, அரச ஊழியர்களுக்கு பல நன்மைகள் இருந்தும் இவ் வருடம் புத்தளம் தொகுதிக்கு நன்மை கிடைக்கவில்லை. இதுவரை ஒரு எம்.பீக்கு ஒதுக்கப்பட்ட நிதி 50 இலட்சம் ரூபாய்கள். ஆனால் இம் முறை ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த கோடியும் இவ்வருடம் எமக்கு கிடைக்காது. அடுத்த தேர்தலில் தாம் தோல்வியடைந்து விட்டால் ஒரு கோடி இல்லாது போகும் என்று இப்பொழுதே அந்த நிதியை தற்போதுள்ள எம்.பீ மார் பெற்றுக்கொள்வர். ஒரு உறுப்பினரின் மறைவை அடுத்து சட்டத்தரணி ஏ.எம். கமறுத்தீன் மாகாண சபை உறுப்பினரானார். அந்த சந்தர்ப்பத்தில் மரணித்த குறித்த மாகாண சபை உறுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பெற்று செலவழித்து முடித்து விட்டார் என்பது இதற்கு உதாரணம்.
புத்தளம் தொகுதிக்கான ஒரு எம்.பீ.யை பெற்றுக்கொள்ள ஒற்றுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதே மிக பொருத்தமானதாகும். பிரிந்து நின்று போட்டியிடுவதால் புத்தளம் தொகுதிக்கான எம்.பீ. என்பது எட்டாக் கனியே. அல்லது தேசிய பட்டியல் மூலம் ஒரு எம்.பீ.யைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இரு பிரதான கட்சிகளில் பிரிந்து கேட்பதைத் தவிர்த்து ஒரு கட்சியில் சிறுபான்மை வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நிறுத்தி போட்டியிட வைப்பது தற்போதுள்ள அரசியல் நிலைக்குப் பொருத்தமாகும். ஏனெனில் அமைய உள்ள அரசு இரண்டு வருடங்களுக்கு ஒரு தேசிய அரசாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளனர். எனவே ஒரு கட் சியில் எமது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் ஒட்டு மொத்த சிறுபான்மை வாக்குகளையும் அளித்து எம்.பீ.யை மட்டுமல்ல ஒரு அமைச்சரைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதியாகும்.
நான் என்ற மனப்பான்மையை கைவிட்டு காலம் பிந்தினாலும் பரவாயில்லை நாம் என்ற மனப்பான்மையுடன் இன்று முதல் திட்டமிடுவோம். நாம் என்று எண்ணும் போது எம்.பீ. என்பது மாத்திரம் அல்ல அமைச்சர் என்பதும் நிச்சயம்.

0 comments
Readers Comments