கட்டுரை ,
ஜனாதிபதிக்காக ஒன்றுபட்டவர்கள் எம்.பீ.க்காக ஒன்றுபடுவார்களா ?
Posted by
Puththelil
Published on
Sunday, February 1, 2015
ஆசிரியர் தலைப்பு - புத்தெழில்
( 16.01.2015 - 31.01.2015 )
ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் செய்திகளை சேகரிக்கச் சென்ற புத்தெழில் செய்தியாளரிடம் ஸாஹிரா தேசிய பாடசாலை முன்பாக கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர் இவ்வாறு கூறினார். இம் முறை தேர்தல் தொடர்பாக முஸ்லிம் மக்கள் தெளிவடைந்துள்ளனர். ஏன் என்று கேட்க, காலை முதலே கூட்டம் கூட்டமாக வாக்களிக்க வரும் மக்களைப் பார்த்துதான் இவ்வாறு கூறுகின்றேன் என்றார் அந்த பொலிஸ் கான்ஸ்டபள்.
புத்தெழில் செய்தியாளர்கள் புத்தளம் நகரிலும் பாலாவி, மதுரங்குளி வரையிலும் செய்தி சேகரிக்கச் சென்ற போது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களைப் பார்த்த சமயம் ஆச்சரியப்பட்டனர். வாக்காளர்களுடன் வாக்காளர்களாக அரசியல் பிரமுகர்களான எஸ்.எச்.எம். நியாஸ், கே.ஏ. பாயிஸ், எம்.என்.எம். நஸ்மி, ஏ.ஓ. அலிகான், எம்.ஏ.ஆர். அலி சப்ரி ஏன் எமது ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ் கூட வரிசையில் நின்றே வாக்களித்தனர். காலையில் வாக்களித்தோர் தொகை ஏராளம். புத்தளம் நகரில் 70 சதவீத வாக்களிக்கப்பட்டு வரலாற்று சாதனையாக இது எழுதப்பட்டு விட்டது.
புத்தளம் தொகுதியை பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த வீதம் இவ்வாறு காணப்படுகின்றது. 2005ல் 64.94சத வீதம் 2010ல் 63.56, 2015ல் 67.96 சதவீதம். பாராளுமன்றத் தேர்தலை நோக்கும் போது 2010ல் 53.49 சதவீத வாக்குகளே அளிக்கப்படடிருந்தன. அதில் 4918 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகள். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 941 மட்டுமே. இது மிகவும் குறைந்த அளவாக காணப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது 2013ல் 55.67 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. புத்தளம் மாவட்ட தபால் மூல வாக்குகளை நோக்கினால் 2005ல் 7,428ம் 2010ல் 7,531ம் அளிக்கப்பட்ட நிலையில் 2015ல் ஜனாதிபதி தேர்தலுக்காக 9,723 தபால் மூல வாக்குகள் அளிக்கபட்டிருந்தன.
கடந்த கால அனைத்து தேர்தல்களையும் நோக்கும் போது இம் முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களித்த வீதம் அதிகரித்து காணப்படுகின்றது. இதற்கு காரணங்கள் பலவற்றைக் கூறலாம். எனினும் பிரதான காரணமாக வாக்களிக்கத் தூண்டும் பல பிரசுரங்கள் உட்பட பல வழிகள் மூலம் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இதன் காரணமாக புத்தளம் வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். என்ற தீர்மானத்திற்கு வந்ததுடன் தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
வாக்களிப்பு வீதம் அதிகரித்தது எதற்காக நமது நாட்டு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக. இந்த உணர்வு நமக்காக ஒருவரையோ அல்லது 1க்கு மேற்பட்டோரையோ தெரிவு செய்யும் விடயத்தில் தீவிரமாக இருத்தல் வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் நாம் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். இழந்து நிற்கும் புத்தளத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் நிலை தொடர்பாக நமது புத்தளம் மக்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். எதை வைத்து தெரியுமா? ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களித்த வீதத்தை கருத்தில் கொண்டுதான். ஜனாதிபதி தேர்தலுக்காக ஐ.ம.சு முன்னணி தனித்து நின்று போராடிய போது ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய,ஜே.வீ.பீ. போன்ற பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து வாக்கு கேட்டன. இதன் விளைவாகவும் வாக்குகள் மைத்ரிபால சிரிசேனவுக்கு அதிகரித்து அவரை ஜனாதிபதியாக்கும் நிலை உருவாகியது. ஐ.ம.சு. முன்னணி தவிர்ந்த புத்தளம் வாக்காளர்கள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
இந்த நிலையில் எம்மை எதிர் நோக்கவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் தனித் தனியாக போட்டியிட உள்ளன. பெரும்பாலும் விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது. புத்தளம் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2ம் இடத்திலேயே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
ஐ.ம.சு. முன்னணி அல்லது ஸ்ரீ.ல.சு. கட்சி, ஐ.தே. கட்சி., முஸ்லிம் காங்கிரஸ், அ.இ. மக்கள் காங்கிரஸ் என்று தனித்தனியாகத் தான் நம்மவர்கள் போட்டியிட இப்பொழுது திட்டம் தீட்டி வருகின்றனர். அப்படியாயின் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் ஜனாதிபதி தேர்தலின் போது அதிகரித்தது போன்று அதிகரித்தும் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் எமது வாக்குகள் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு ஒன்றாக அளிக்கப்பட் டது போன்று அமையாது. பிரதானமாக 3 அல்லது 4 கட்சிகளுக்கு பிரித்தே வாக்குகள் அளிக்கப்படும். இது நிதர்சனம். ஜனாதிபதியை தெரிவு செய்த புத்தளம் மக்கள் இழந்து போயுள்ள எம்.பீ.யை பெற்றுக் கொள்ள நிச்சயம் ஒன்றிணைய வேண்டும். விகிதாசார முறை என்பதால் வெளியார் எமது வாக்கை சூறையாடும் நிலையும் காணப்படும்.
ஏனெனில் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கே.ஏ. பாயிஸ் 26,489 வாக்குகளையும் (9வது இடம்) எஸ்.ஏ. எஹியா 17,571 வாக்குகளையும் (5வது இடம்) ஏ.எம். இஸ்மாயில் 12,021 வாக்குகளையும் (7வது இடம்) பெற்றும் கூட எம்.பீ. யாக முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் தொகுதியில் மைத்திரிபால சிரிசேனவிற்கு கிடைத்த வாக்குகள் 58,844 மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகள் 24,235. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளையும் பாராளுமன்ற தேர்தலில் யாரும் ஒரு வேட்பாளருக்கு அளிக்கப் போவதில்லை. எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை. அதேபோல மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த 24,235 வாக்குகளைக் கூட ஒரு வேட்பாளர் பெற்றால் எம்.பீ.யாக முடியுமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இறுதி பாராளுமன்ற தேர்தலில் ஐ.ம.சு முன்னணியில் இறுதி எம்.பீ.யாக தெரிவுசெய்யப்பட்ட மில்ரோய் பெற்றுக் கொண்ட வாக்குகள் 31,509.
எனவே எதிர் நோக்கவுள்ள பாரளுமன்ற தேர்தலில் புத்தளத்திற்கான எம்.பீ. யைப் பெற்றுக் கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டும். இங்கு பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகள் திட்டமிட்டு செயற்பட்டால் ஆளுங்கட்சி தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் நமக்காக ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பீ.க்களை தெரிவு செய்ய முடியும்.

0 comments
Readers Comments