பிரதான செய்திகள் ,
ஸாஹிராவில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையம்
Posted by
Puththelil
Published on
Wednesday, December 10, 2014
ஆண்டு தோறும் நாடெங்கிலுமுள்ள பிரதான நகரங்களில் அமைக்கப்படும் க.பொ.த.
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களில் ஒன்று புத்தளம்
நகரிலும் அமைக்கப்பட வேண்டுமென்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்திடம்
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய
ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் எம் அனஸ்
இவ் வாண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நிலையம் புத்தளம் நகரிலும் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களத்தின் மதிப்பீட்டுக் கிளைக்குப் பொறுப்பான உதவிப் பரீட்சை ஆணையாளர் எஸ். பிரகாசன் தெரிவித்தார். இம்மதிப்பீட்டு நிலையம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்படவுள்ளது.
இது வரை காலமும் வடமேல் மாகாணத்தில் சிலாபம் நகரத்தில் மாத்திரமே மதிப்பீட்டு நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. இதனால் புத்தளத்திலும் மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலும் இருந்துவரும் விடைத்தாள் பரீட்சகர்களின் அடிப்படை வசதிகளைக் கருத்திற் கொண்டும் புத்தளம் நகரப் பாடசாலை அதிபர் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியினைக் கருத்திற் கொண்டும் புத்தளம் நகரிலும் விடைத்தாள் மதிப்பீட்டு நிலையம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பரீட்சை ஆணையாளருக்கு எமது சங்கம் சுட்டிக் காட்டியிருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு இம் முறை புத்தளம் நகரிலும் விடைத்தாள் மதிப்பீட்டு நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக வடமேல் மாகாண அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் சார்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆணையாளர் டபிள்யூ.எம்.என். ஜயந்த புஸ்பகுமாரவுக்கும் பிரதிப் பரீட்சை ஆணையாளர் எம்.எம். முகம்மதுவுக்கும் உதவிப் பரீட்சை ஆணையாளர் எஸ். பிரகாசனுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் எம் அனஸ் தெரிவித்துள்ளார்.

0 comments
Readers Comments