<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வடமாகான முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு நியமிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்


( அப்துல் நமாஸ் )
வடமாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவலங்களையும் கண்டறிய ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறு வடமாகாண மஜ்லிஸுல் உலமா தலைவர் அஷ்ஷேக் எஸ்.எச்.எம். முபாரக் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

புத்தளம் தில்லையடி  முஹாஜிரீன் அரபுக் கல்லூரி மாணவர்கள் மத்ரஸாவிற்கு முன்னாள் இன்று மாலை அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.  இறுதியில் உரை நிகழ்த்திய அஷ்ஷேக் எஸ்.எச்.எம். முபாரக்   வடமாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவலங்களையும் கண்டறிய ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக விளக்கமளித்தார்.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி வடமாகாண முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு 24 ஆண்டுகள் பூர்த்தியை நினைவு கூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
 

 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors