<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் ட்ரகன்ஸ் அணி செம்பியன்

(அஸாம் அஸீஸ்)
 
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று கல்பிட்டி அல் அக்ஸா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற அணிக்கு 11 வீரர்களைக் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்  புத்தளத்தைச் சேர்ந்த ட்ரகன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளது.
ட்ரகன்ஸ் அணி 7 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட் இறுதிப்போட்டியில் கல்பிட்டியைச் சேர்ந்த பிரபல ஆரியன்ஸ் அணியை 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆரியன்ஸ் அணி 53 ஓட்டங்களை 6 விக்கெட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ட்ரகன்ஸ் அணி 54 ஓட்டங்களை 6.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. ரியாஸ்டீன் 24 ஓட்டஙக்களையும் ஸய்த் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சாம்பியன் அணிக்கு 30000/- பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக (Man of the Match) ட்ரகன்ஸ் அணியின் ரியாஸ் டீனும் தொடரின் நாயகனாக (Player of the Series) ட்ரகன்ஸ் அணியின் கோகுலனும் (கோபி) தெரிவுசெய்யப்பட்டனர்.

சுமார் 25 பலம்வாய்ந்த அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.
 
 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors