Feature Featured Post நிகழ்வுகள் விளையாட்டுச் செய்திகள் ,
ட்ரகன்ஸ் பிக் பேஷ் 2014 - மென்பந்து கிரிக்கெட்
Posted by
Puththelil
Published on
Sunday, March 2, 2014
புத்தளம் ட்ரகன்ஸ் ( Puttalam Dragons ) அணியினால் பெப்ரவரி 27, 28 மற்றும்
மார்ச் 1 ஆகிய தினங்களில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று
நடாத்தப்பட்டது.
இப்போட்டிகள் ட்ரகன்ஸ் மற்றும் நாகாஸ் மைதானங்களில் நடைபெற்றது.
சுமார் 24 அணிகள் பங்குபற்றின. அணிக்கு 11 வீரர்களைக் கொண்ட 8, 6 மற்றும் 4 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட போட்டிகள் நடைபெற்றன.
இறுதிப்போட்டியில் கல்லடியைச் சேர்ந்த பிரபுத்த அணியும் புத்தளத்தின் சுகத அணியும் பலப்பரீட்சை நடாத்தின. இறுதியில் பிரபுத்த அணி சுகத அணியை வீழ்த்தி சாம்பியின் பட்டத்தை பெற்றுக்கொண்டது.
சாம்பியன் அணிக்கு 40000 பணப்பரிசும் வெற்றிக்கிண்ணம் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் இடத்தைப் பெற்ற சுகத அணிக்கு 20000 பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இறுதிப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் விருதுகளும் பணப்பரிசுகளுடன் வழங்கிவைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தார்.

0 comments
Readers Comments