<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த கல்பிட்டி பிரதேச சபை நடவடிக்கை

( ஆர்.எம். ஹதீத் )
நுரைச்சோலை நகரில் போது மக்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டமொன்றினை கல்பிட்டி பிரதேச சபை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்த கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எச்.எம். மின்ஹாஜ்

நுரைச்சோலை நகரில் கட்டாக்காலி கால்நடை காரணமாக போது மக்களும்    போக்குவரத்தில ஈடுபடும் வாகனங்களும் பல அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.  கட்டாக்காலி கால்நடைகள் வாகனங்களில் மோதுண்டு விபத்துக்குள்ளாகும் நிலை சாதரணமாகக் காணப்படுகின்றது.  கட்டாக்காலி கால்நடைகளை  கட்டுப்படுத்தும் முகமாக வீதிகளில் பிடிபடும் கட்டாக்காலி கால்நடைகள் பிரதேச சபையினால் கைப்பற்றப்பட்டு ஒரு நாளைக்கு 5,000 ரூபா தண்டப் பணம் அறவிடப்படும். மூன்று நாட்களுக்குள் பிடிபட்ட  கால்நடைகள் மீட்கப்படாதவிடத்து அந்த கால்நடைகள் சபைக்கு சொந்தமாகும் என்று கல்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் புத்தெழிலுக்கு விளக்கமளித்தார்.

இன்று காலையில் கூட கன்றொன்று வாகனத்தில் மோதி இறந்துள்ளது. 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors