Feature நிகழ்வுகள் ,
புத்தளம் ஸாஹிராவில் பல்வேறு நிகழ்வுகள்
Posted by
Puththelil
Published on
Monday, October 7, 2013
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் இன்று காலை நான்கு நிகழ்வுகள் இடம் பெற்றன. தரம் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விளையாட்டு கழகம் மற்றும் மாணவர் கல்வி அடைவு மட்டத்திற்கான Log Bookகளை புத்தெழில் செய்தியாளர் ஏ.என்.எம். முஸ்பிக் பாடசாலை அதிபரிடம் அன்பளிப்பு செய்தார்.
6ஆம் வகுப்புகளுக்கிடையே நடைபெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற 6 D வகுப்பு அணிக்கு பாடசாலை அதிபர் எம்.எச்.எம். றாஸிக் வெற்றிக் கிண்ணத்தை பரிசளித்தார்.
கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 40ஆவது நிறைவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அறிவிப்பாளர் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வெற்றி பெற்ற ஸாஹிரா மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்ற சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஸாஹிரா பாடசாலையில் மரம் நடும் நிகழ்விற்காக மரக் கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.











0 comments
Readers Comments