புத்தளம் நட்சத்திரங்கள் ,
புழுதிவயல் பாடசாலை வரலாற்றில் ஹிஸான் அதி கூடிய புள்ளியுடன் சித்தி
Posted by
Puththelil
Published on
Wednesday, October 9, 2013
2013ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் புழுதிவயல் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.ஜே. முஹம்மது ஹிஸான் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
1936ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இது வரை 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். புழுதிவயல் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர் என்ற பெயரை முஹம்மது ஹிஸான் பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டில் முஹம்மது ஹிஸானின் சகோதரி பாத்திமா ஹஸ்னா 146 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முஹம்மது ஹிஸான் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலய கணிதப் பாட ஆசிரியர் ஏ.ஆர்.எம். ஜமால்தீன் மற்றும் பீ.எஸ்.எஸ். ஜெஸ்மி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார்.

0 comments
Readers Comments