Feature பிரதான செய்திகள் ,
புத்தளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயம்
Posted by
Puththelil
Published on
Sunday, August 18, 2013
( அஸ்ரின், அஸாம், நமாஸ் )
புத்தளம் அநுராதபுர வீதி இராணுவ முகாமிற்கு அருகில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலை அவசர சத்திர சிகி்ச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம் பெற்றுள்ளது. வாகனம் பாதையை விட்டு விலகியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக அறிய முடிகின்றது. விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணம் செய்த மூவரே இந்த விபத்தில் காயமடைந்தவர்களாவர்.
புத்தளம் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை பொறுப்பாளர் திலக், புத்தளம் தள வைத்தியசாலை ரெகோரட் ரூம் பொறுப்பாளர் நிவ்டன் மற்றும் தாரக என்ற மூவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா புத்தெழிலுக்குத் தெரிவித்தார். நிவ்டன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

0 comments
Readers Comments