Feature பிரதான செய்திகள் ,
வறிய குடும்பங்களுக்கு கூரை ஓடுகள் விநியோகம்
Posted by
Puththelil
Published on
Saturday, August 31, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
2014ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் மகிந்த சிந்தைனை ' இசுருமத் நிவஹனக் ' வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமூர்த்தி அதிகார சபை மூலம் சமூர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கூரை ஓடுகள் நேற்று விநியோகிக்கப்பட்டன.
புத்தளம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள 96 குடும்பங்களில் முதல் கட்டமாக 10 குடும்பங்களுக்கு கூரை ஓடுகள் விநியோகிக்கப்பட்டன. முள்ளிபுரம், மணல்தீவு, தில்லையடி, புதுக்குடியிருப்பு, சேனைக்குடியிருப்பு பிரதேசங்கள் உட்பட 10 பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு 8,200 ஓடுகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் புத்தளம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் நிரூபா அதிகாரி, சமூர்த்தி அதிகாரிகளான எம்.ஓ.எம். றிபாய், ஜே.எம். ஜெஸீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments