Feature தேசிய செய்திகள் ,
அல் அக்ஸா மாணவர்கள் நால்வருக்கு ஜனாதிபதி பதக்கம்
Posted by
Puththelil
Published on
Monday, June 3, 2013
( கல்பிட்டி செய்தியாளர் )
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படுகி்ன்ற தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் 2013ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கத்தை கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் நால்வர் பெற்றுக் கொண்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஏ.எச்.எம்.எம். சாபி புத்தெழிலுக்குத் தெரிவித்தார்
தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது, இந்த நிகழ்வின் போதே கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
எம்.ஏ.எம். அப்ஸான், எம்.எச்.சிபாக் அஹமட், எம்.ஏ.எம். ஆதில்ஸான், எம்.எஸ்.ஏ.எஸ். ஆஸிப் ஆகிய நான்கு மாணவர்களுமே ஜனாதிபதி பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை முதல் முறையாக தமிழ் மொழி மூலம் 5 மாணவர்கள் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இவர்களில் நான்கு மாணவர்கள் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments
Readers Comments