Feature விளையாட்டுச் செய்திகள் ,
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் வேட்பு மனு பரிசீலனை
Posted by
Puththelil
Published on
Monday, June 10, 2013
( ஜே.எம். ஜவ்ஸி )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இடம் பெறவுள்ள புதிய நிர்வாக சபை தெரிவிற்காக கிடைக்கப் பெற்ற வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன. புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் செயலாளரினால் நியமிக்கப்பட்ட ஜே.இஸட்.ஏ. நமாஸ், எம்.யூ.எம். சனூன், கே. அஸ்மி மொஹமட் ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் கிடைக்கப் பெற்ற வேட்பு மனுக்களை பரிசீலித்தனர்.
அதன் அடிப்படையில் எஸ்.எம். ரபீக் ( தரீ ஸ்டார்ஸ் ) , எச்.எம்.எம். சபீக் ( நிவ் பிரண்ட்ஸ் )ஆகிய இருவரும் தலைவர் பதவிக்காக போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். எம்.எம். பாரூக் ( போல்ட்டன் ) , ஏ.எம். அன்சார் ( லிவர்பூல் ) , பீ.எம். ஹிஸாம் ( லிவர்பூல் ) , எம்.டீ. ரினாஸ் மொஹமட் ( த்ரீ ஸ்டார்ஸ் ) ஆகிய நால்வரும் உப தலைவர் பதவிக்காக போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். ஏனைய பதவிகளுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெறாததால் அப் பதவிகளுக்காக தேர்தல் இடம் பெறாது.

0 comments
Readers Comments