மாணவர் எழில் ,
காலம் தங்கத்தை விட பெறுமதியானது
Posted by
Puththelil
Published on
Tuesday, April 2, 2013
இஸ்லாம் கூட நேரம் தவறாமையையே ஐவேளைத் தொழுகை மூலம் எமக்கு கற்பிக்கின்றது. எனவே நாம் நேரத்தை முகாமை செய்ய பழக வேண்டும். உதாரணமாக காலையில் நாம் நேரத்தோடு எழும்பினால் நேரத்தோடு பாடசாலைக்கு வர முடியும். அவ்வாறு வருவதால் பாடங்களில் நன்றாக கவனம் செலுத்த முடியும்.
நேர முகாமைத்துவத்தை தவறினால் எமது எல்லா வேலைகளும் தோல்வியாக முடியும். நாம் எமது நேரத்தை வீணான விடயங்களில் செலவிடக் கூடாது. ஏனெனில் நேரம் ஒரு முறை தவறினால் அதை மீளப் பெற முடியாது.
மக்கள் அனைவரும் காலத்தை தங்கத்திற்கு ஒப்பிடுகிறார்கள். ஆனால் நான் கூறுகிறேன் காலம் தங்கத்தை விட பெறுமதியானது.
ஏனெனில் தங்கம் தெலைந்து போனால் கூட பணத்தை கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் நேரத்தை வாங்க முடியாது.
ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம். ஏனென்றால் காலம் ஒரு முறை தொலைந்தால் தொலைந்ததுதான். நேரத்தை பயனுள்ளதாக கழிப்போம்.
ஏ.கே.எப். ரிஸ்னா
வெட்டாளை அஸன்குத்தூஸ் வித்தியாலயம்
புத்தளம்.


0 comments
Readers Comments