<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

( அப்துல் நமாஸ் )
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி  ஏனைய இன மக்களும் அச்சத்துடன் வாழும் ஒரு சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பான கலந்துரையாடலொன்று புத்தளம் மாவட்ட செயலக கேட் போர் கூடத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை )  இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட இணைப்பாளரும் புத்தளம் நகர சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம். அலி சப்ரியின்  ஏற்பாட்டில் இடம் பெற்ற  இந்த கலந்துரையாடல்   புத்தளம் மாவட்ட செயலாளர் என்.  சித்ரானந்த  தலைமையில் நடைபெற்றது.   புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் சம்பிக்க சிறிவர்தன, பொலிஸ் அத்தியாட்சகர் ஜே.ஏ. சந்திரசேன மற்றும் இராணுவ, கடற் படை உயர் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரச அதிகாரிகள்  ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.  

கல்பிட்டி, முந்தல், வண்ணத்தவில்லு பிரதேச மஸ்ஜித் நிர்வாகிகள் உலமாக்கள் உட்பட பொது மக்கள் தமது பிரதேசத்தில் பொலிஸ் மற்றும்  பாதுகாப்பு படையினரால்  தற்போது மேற் கொள்ளப்பட்டு வரும்   சோதனை  தொடர்பாக பொது மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலை தொடர்பாக இந்த கலந்துரையாடலில் விளக்கமளித்தனர்.

குறிப்பாக எதிர்நோக்கவுள்ள நோன்பு காலத்தில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தொடர்பாகவும் இங்கு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன . சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருட்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விளக்கமளிக்கப்பட்டது. இது தொடர்பில் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக   முஸ்லிம் மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும்  இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில்   வாழும்  முஸ்லிம்கள் தொடர்பில்   தாம் பூரண பாதுகாப்பு  வழங்கி வருவதாகவும்  பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் புத்தளம் முஸ்லிம்கள் தமக்கு தகவல்களை வழங்குமாறும் தமக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறும்  இந்த கலந்துரையாடலில்  பாதுகாப்பு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.   ரமலான் கால வணக்க  வழிபாடுகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு பிரிவினர் சோதனைகளை மேற் கொள்ளும் போது  தாம்  அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள்  கருத்து  தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors