<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கிழங்கில் அல்லாஹ், முகம்மத் என்ற பெயர்கள்

( அப்துல் நமாஸ் )
இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்த சமயம் ஒரு சகோதரர் வெட்டப்பட்ட கிழங்கு ஒன்றை காட்டி மெளலவி இதில் என்ன எழுத்து தெரிகிறது என்று வாசிக்குமாறு கூறினார். நானும் அதில் இருந்த எழுத்துக்களை வசித்த போது அல்லாஹ், முகம்மத் என்ற சொற்கள் இருப்பதை கண்டேன் என்று மெளலவி எச்.எம். மின்ஹாஜ் என்னிடம் கூறினார். அது தொடர்பான மேலும் சில தகவல்களையும்   மெளலவி  மின்ஹாஜ் கூறியதும் குறித்த கிழங்கை பார்பதற்காக மெளலவி மின்ஹாஜ் அவர்களை அழைத்துக் கொண்டு குறித்த இடத்திற்குச் சென்றேன்.

புத்தளம் முள்ளிபுரம் அஹமத் சியாம் என்பவற்றின் வீட்டில்தான் அல்லாஹ் முஹம்மத் என்ற சொற்களுடன் கூடிய கிழங்கு காணப்பட்டது. அது தொடர்பாக சியாமிடம் வினவிய போது பின்வரும் விடயங்களை கூறினார். 

நேற்று இரவு 9 மணியளவில் மனைவி உணவிற்காக கிழங்கு வெட்டிக் கொண்டிருந்தாள். கிழங்கில் ஒரு குர்ஆன் ஆயத்து இருக்கின்றது வந்து பாருங்கள் என்று மனைவி அழைத்தாள். அல்லாஹ் என்ற சொல் வெட்டபட்ட கிழங்கில் தெரிந்தது. அந்த கிழங்கை உயரமான இடத்தில் வைத்து விட்டு தூங்கி விட்டோம்.  காலையில் கிழங்கின் மறு பக்கத்தைப் பார்த்த போது முகம்மது என்ற சொல்லும் இருப்பதைக் கண்டோம். நேற்று இரவு கிழங்கின் மறு பக்கத்தை நாம் பார்க்கவில்லை. என்னுடைய சகோதரர் ஒருவரின் கடையிலேயே இந்த கிழங்கை வாங்கினேன். குறித்த கிழங்கை வாடாமல் இருப்பதற்காக  குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளேன் என்று சியான் கூறினார்.

சியான் ஒரு தொழுகையாளி என்றும்  தஹஜ்ஜத் தொழுகையை தொழுது வருபவர் என்றும் தெரிய வந்தது.


 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors