<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவில் மீலாதுன் நபி விழா

( ஸாஹிரா ஊடக கழகம் ) 



கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் மீலாதுந் நபி விழா இன்று  இடம் பெற்றது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில்  அதிபர் எஸ். ஏ. சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேக் எச். எம். மின்ஹாஜ், புத்தளம் பௌத்த மத்தியஸ்தான நிலைய ஹொரண தேவானந்தா தேரர், புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஜெகன் சர்மா குருக்கள் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் புத்தளம் வலயக்கல்விப் பணிமனை இஸ்லாம் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். அபுல் ஹுதா பிரதம அதிதியாகவும்  கலந்து கொண்டனர். பாடசாலைக்கு வருகை தந்த அனைவரும் பேரீத்தம் பழம் மற்றும் கற்கண்டு வழங்கி வரவேற்கப்பட்டனர்.

மாணவர்களின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் 2015 வடமேல் மாகாண மற்றும் தேசிய ரீதியிலான மீலாதுந் நபி இஸ்லாமிய தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors