<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அதிபர் யாக்கூப் தாய்லாந்து பயணம்

( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் கல்விச் சுற்றுலா நிமித்தம் தாய்லாந்து நாட்டுக்கு பயணமாகவுள்ளார். கல்வி அமைச்சினால் நாட்டிலுள்ள 27 பாடசாலை அதிபர்களுக்கு இந்த வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய தொழில் நுட்ப நிறுவனத்தினால் இம் மாதம்  8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை  தாய்லாந்தில் நடாத்தப்படவுள்ள பயிற்சி செயலமர்வில் இந்த அதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். வெளிநாடு கல்விச் சுற்றுலாவில் கலந்து கொள்ளவுள்ள அதிபர்களில் தமிழ் மொழி மூல ஒரேயொரு அதிபராக யாக்கூப் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வெளிநாடு பயணமாகவுள்ள அதிபர் யாக்கூபை கெளரவிக்கும் நிகழ்வு இன்று காலைக் கூடத்தின் போது இடம் பெற்றது.  ஸாஹிரா ஊழியர் நலன்புரி சங்கம் இந்த கெளரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors