Feature தேசிய செய்திகள் ,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு விஜயம்
Posted by
Puththelil
Published on
Sunday, July 5, 2015
( ஜூட் சமந்த )
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று சனிக்கிழமை சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தந்தார். அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காகவே அங்கு விஜயம் மேற் கொண்டார்.
சமய வழிபாடுகளின் பின்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் ஊடகவியலார்கள் கேள்விகளைத் தொடுத்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறுகின்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பொதுத் தேர்தலில் வேட்பு மனு வழங்க இருப்பதாக, இது தொடர்பாக அதன் பிரதான பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகர் என்ற வகையில் நீங்கள் தெரிந்த விடயங்களை கூறுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலார்கள் கேள்வி எழுப்பினர். அது எனக்கு தெரியாது, நான் அரசியல் கதைக்க இங்கு வரவில்லை. சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளவே இங்கு வருகை தந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பதிலளித்தார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலார்கள் மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்ட போதும் அவர் விடை அளிக்காது அங்கிருந்து சென்று விட்டார்.

0 comments
Readers Comments