புத்தளம் தேர்தல் களம் ,
தேர்தல் தொடர்பில் பெரிய பள்ளிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாமென்ற வேண்டுகோள்
Posted by
Puththelil
Published on
Wednesday, July 29, 2015
( அப்துல் நமாஸ், ஹமீத் மரைக்கார் )
2015 பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் புத்தளம் பெரிய பள்ளியின் பெயரை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவுறுத்தும் கூட்டமொன்று புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்தினால் இன்று இரவு நடாத்தப்பட்டது.
புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம்.ஏ. ஜனாப் மற்றும் பெரிய பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபையினால் பாராளுமன்ற தேர்தல் 2015 என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் புத்தளம் மாவட்டத்தின் பொது தலைமைப் பள்ளிவாயலான புத்தளம் பெரிய பள்ளி வாயலின் பெயரை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றமை தொடர்பாக எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புத்தளத்தின் பொதுத் தலைமையாக அரசியல், கட்சி, இயக்க வேறுபாடுகளின்றி தொன்று தொட்டு செயற்பட்டு வரும் புத்தளம் பெரிய பள்ளிவாயலின் செயற்பாடுகள் ஒரு சிலரின் அரசியல் ரீதியாக, பெரிய பள்ளிவாயலின் நற் பெயருக்கு அரசியல் சாயம் பூசுகின்ற நடவடிக்கைகளினால் அபகீர்த்திக்குள்ளாகின்றமை தொடர்பாக புத்தளம் வாழ் மக்கள் சார்பாக பெரிய பள்ளிவாயல் தமது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றது.
புத்தளம் பெரிய பள்ளிவாயல் தற்போது புத்தளம் பிரதேசஅனைத்து பள்ளிவாயல்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்கிய தலைமைத்துவத்தைக் கொண்டு செயற்பட்டு வருகின்றமையால் இத்தகைய செயற்பாடுகள் புத்தளம் பிரதேச பள்ளிவாயல் தலைமைத்துவ கட்டமைப்புகளில் தாக்கத்தை செலுத்தவல்லது.
அத்தோடு புத்தளம் பெரிய பள்ளியின் நிர்வாகம் எந்தவொரு அரசியல் சார் நடவடிக்கைகளுக்கோ அல்லது பிரச்சாரத்திற்கோ ஒத்துழைப்பையோ அல்லது அனுமதியையோ இதுவரை எந்தவொருஅரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சை குழுக்களுக்கோ வழங்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு பெரிய பள்ளியின் நிழற் படத்துடன் கட்சிகளின் இலட்சினைகளைப் பயன்படுத்தி வங்குரோத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பாராளுமன்ற தலைமைத்துவத்தை தெரிவு செய்கின்ற பொறுப்பை அல்லாஹுத்தஆலா எமக்களித்த ஓர் அமானிதமாகக் கருதி ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி, பொருத்தமானவர்களை பிரதி நிதித்துவத்திற்கு தெரிவு செய்வதற்கு முன்வருமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கின்றோம்.
வாக்குரிமை பெற்ற சகலரும் குறித்த தினம் தமது வாக்குச் சாவடியில் வாக்குகளை கட்டாயம் அளிக்குமாறும் பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

0 comments
Readers Comments